விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'மோதலும் காதலும்'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் விக்ரமுடைய கம்பனி வீடு, ஷேர் என எல்லா சொத்துப் பத்திரத்திலும் கையெழுத்துப் போடுமாறு கூறி விக்ரமை ஆதி அழைக்கின்றார். மேலும் ஆதி அருகில் இருப்பவரிடம் விக்ரம் சொத்துப் பாத்திரத்தில் கையெழுத்துப் போட்டதும் தன்வியை தான் விக்ரமிடம் கொடுக்க மாட்டேன் என்கிறார்.
பின்னர் அங்கு வந்த விக்ரம் குறித்த சொத்துப் பத்திரத்தில் தன்வியை மீட்கும் நோக்குடன் கையெழுத்துப் போட முனைகின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த வேதா கையெழுத்துப் போட வேணாம் எனக் கூறி விக்ரமைத் தடுக்கின்றார்.
விக்ரம் தனக்கு வேறு வழியே இல்ல கையை விடு எனக் கூறியும் கேட்காத வேதா அந்த அக்ரீமெண்ட் பத்திரத்தைக் கிழித்து எறிகின்றார்.
Listen News!