சர்வைவரில் பார்வதிக்கும் ஜஸ்வர்யாவுக்கும் இடையில் நள்ளிரவில் மோதல்

262

ஷு தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியில் இன்று என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அதாவது காடர்கள் அணி நேற்று நடந்த போட்டியில் தோல்வியுற்றதால் அவர்களுக்கான தண்டனையை தலைவர் விஜயலக்ஷ்மி செய்தார். பின்பு மூன்றாம் உலகத்திலுள்ள காயத்திரி மற்றும் இந்திரஜாவைக் காண்பித்தார்கள். அவர்கள் இருவரும் தாம் உணவு இன்றி இருப்பதாக தெரிவித்தார்கள். அதில் இந்திரஜா இந்த நேரத்தில் தனது குடும்பத்தை மிஸ் செய்வதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து வேடர்கள் அணியினரைக் காண்பித்தனர். அதில் ஜஸ்வர்யாவுக்கும் பார்வதிக்கும் இடையில் மோதல் நடந்ததாக கூறப்பட்டது. இதனால் அந்த சண்மை பற்றி பார்வதியிடம் மற்றப் போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின்பு இருவரும்கும் அடுத்த போட்டிக்கான ஓலை வந்தது. அதில் உங்களது வாழ்க்கையில் யாருக்கு நன்றி மற்றும் மன்னிப்பு கூறுவீர்கள் என்பதனை குழுவில் உள்ளவருக்கு கூறுமாறு எழுதப்பட்டிருந்தது.

இதனால் இரு அணியினரும் கூற ஆரம்பித்தனர். அதில் ராம்சி மற்றும் நந்தா ஆகியோர் தமது அம்மா அப்பாக்கு நன்றியைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பார்வதியும் தனது குடும்பத்திற்கு நன்றி மற்றும் மன்னிப்பைத் தெரிவித்தார். பின்பு விக்ராந்த் தனது மனைவிக்கும் அன்ஜித் தனது முழுக்குடும்பத்திற்கும் நன்றியைத் தெரிவித்தார்.

இவ்வாறு ஒவ்வொருவரும் தாம் யாருக்கு நன்றி மற்றும் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்பதைக் கூறினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.