மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்…போடப்பட்ட பிடி வாரண்ட் உத்தரவு..!

தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் முன்னணி ஹீரோயின்களின் அளவிற்கு சீன் போட்டாலும் ‘8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் குணசித்திர வேடத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார்.

அதைமட்டுமன்றி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளான ‘ஜோடி நம்பர் 1’ மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாட்டில் களை கட்டியிருக்கின்றார்.

பிக்பாஸ் வீட்டில் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு கிடைத்தாலும், சேரன் குறித்து இவர் கிளப்பிய பிரச்சனைகளால் ரசிகர்களின் ஆதரவு குறைந்து, அதனைத் தொடர்ந்து வாக்குகள் குறைந்து அந்த போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். அதில் இவர் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று மிகப்பெரியளவில் இவரை சிக்கலில் சிக்க வைத்திருந்தது. இவ் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக நலன் சார்ந்த அமைப்புகள் இவர் மீது புகார் கொடுத்திருந்தன.

அப்புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆனது மீராமிதுனை கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அவ்வழக்கினைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு பல நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எனினும் இவ்வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. எனினும் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில அவ்வப்போது விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. ஐவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தே வெளியில் வந்திருந்தார்.

ஆனாலும் அதனைத் தொடர்ந்து இவர் சாட்சி விசாரணைக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜர் ஆகவில்லை. இதனால் தற்போது 2 ஆவது முறையாக மீரா மிதுனுக்கும் அவரது வழக்கறிஞருக்கும் பிடி வாரண்ட் போடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்