• Mar 25 2023

மீனாவின் முன்னாள் காதலனை 'பச்சோந்தி' எனக் கூறிய பிரபல இயக்குநர்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் பிரபலங்களில் ஒருவராக வலம் வருகின்ற ரித்திக் ரோஷன், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பேங் பேங், வார்' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி இருந்தார். இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது சித்தார்த் ஆனந்த்-ரித்திக் ரோஷன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.


அதாவது சித்தார்த் ஆனந்தின் 'ஃபைட்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ரித்திக் ரோஷன். ஏற்கெனவே இவர்களின் கூட்டணி வெற்றிக் கூட்டணி என பெயர் எடுத்துள்து. அதனால் ஃபைட்டர் படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ரித்திக் ரோஷனுடன் சேர்ந்து 3-ஆவது முறையாகவும் வேலை செய்வது குறித்து சித்தார்த் ஆனந்த் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறி இருக்கின்றார். அதில் அவர் "இது ரித்திக்கும், நானும் பண்ணும் மூன்றாவது படம் ஆகும். என் ஒவ்வொரு பட கதாபாத்திரங்களும் எப்பொழுதும் வித்தியாசமானதாக அமைந்து இருக்கும். ராஜ்வீர் மற்றும் கபீர் கதாபாத்திரங்கள் முற்றிலும் மாறுபட்டவை. 


அந்தவகையில் ஃபைட்டரில் Patty என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரித்திக் ரோஷன். அவர் ஒரு பச்சோந்தி போன்று. அச்சு அசலாக அந்த கதாபாத்திராமாகவே மாறிவிடுவார். அதாவது கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக நடித்து அசத்துவார். அதனால் அவர் கதாபாத்திரமாக நடிக்க மாட்டார், நடிப்பிலும் அதுவாகவே மாறிவிடுவார்" என்கிறார்.


மேலும் "பேங் பேங் படத்தில் வந்த ராஜ்வீர், வார் படத்தில் வந்த கபீர் கதாபாத்திரங்களில் இருந்து Patty மாறுபட்டிருக்க வேண்டும் என நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். ரித்திக் ரோஷன் Patty ஆகவே மாறியதை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இப்படி ஒரு நடிகர் கிடைக்க வேண்டும் என்பதை தான் அனைத்து இயக்குநர்களும் விரும்புவார்கள். அவருடன் சேர்ந்து வேலை செய்வது ரொம்ப ஜாலியானது" எனவும் தெரிவித்துள்ளார் சித்தார்த் ஆனந்த்.

Advertisement

Advertisement

Advertisement