• Apr 01 2023

மக்களின் கஷ்டங்களை கொட்டி தீர்த்த மயில்சாமி; இணையத்தில் வைரலாகும் வெளிப்படைப் பேச்சு

Prema / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் மயில்சாமியின் மரணத்தைத் தொடர்ந்து அவர் குறித்த பல விடயங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போதும் கண்ணீர் கலந்த தொனியுடன் மயில்சாமி பேசிய கருத்துக்களும் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.


அதாவது ஒரு பேட்டியில் அவர் மக்களின் கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது "எனக்கு ஏமாற்றத் தெரியாது, பொய் சொல்லாது தெரியாது, அடுத்தவன் பொக்கட்டில் இது வரைக்கும் கை விட்டு காசு எடுத்தது இல்லை, நல்லா சம்பாதிப்பேன், நல்லா செலவு பண்ணுவேன், நல்லா நாலு பேருக்கு கொடுப்பேன், அந்த வேதனையில் தான் நான் இதெல்லாம் பேசுறேன்" என்றார்.

பின்னர் "காரில போறது எல்லாம் பெருமை இல்லைங்க. நடந்து போகும் போது இந்தா போறாரு பாருங்க அப்பிடின்னு மனசு நிறைஞ்சு சொல்லணும். தப்புப் பண்ணிட்டு போகும் போது இந்தா போறான் பாருங்க என்று கோபத்தில கத்தக் கூடாது.

எனக்கு ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற மாதிரி ஒரே ஒரு தலைவன் எம்.ஜி.ஆர். இன்னொரு கடவுள் அண்ணாமலையார். காமராஜ் இறக்கும் போது அவரின் பாக்கில் 5ரூபா நோட்டு 80,90 ரூபா இருந்திச்சு என்பாங்க, அதேமாதிரி அறிஞர் அண்ணா இறக்கும் போது அவங்க வீட்டில கூடி ஒண்ணும் இல்லை தன் இனிமையான குடும்பம் ஒன்றிற்கு மட்டும் தான் வறுமையைத் தந்தான் அப்பிடி என்று சொல்லுவார்கள்.


அந்தக் காலத்தில் அவர்கள் மாதிரியே இந்தக் காலத்தில் அப்துல்கலாம் அவர்கள் இருந்தார்கள், அவர் பெயரை சொல்லும் போது கூடி எனக்கு அழுகை வருகிறது. அவர் இறக்கும் போது அவரின் அக்கவுண்டில் 2500 ரூபா தான் இருந்திச்சு. இந்த மாதிரி மனுஷங்க வாழ்ந்த இந்த உலகத்தில் கோடான கோடி சொத்துக்களை சேர்த்து வைத்து மக்களை ரொம்ப அவஸ்தைப் படுத்திறீங்க" எனவும் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். 

மேலும் "மனவேதனையில் சொல்கிறேன், பணத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டும் போது கொஞ்சம் அப்துல்கலாமை நினைத்துக் கொள்ளுங்கள், என் தலைவன் எம்.ஜி.ஆர் ஐ நினைத்துக் கொள்ளுங்கள், அவர் நினைத்து இருந்தால் தமிழ்நாட்டில் போரூரையே வளைத்துப் போட்டிருக்கலாம், ஆனால் அந்த மனுஷன் அதை எல்லாம் செய்யல, அரசியல் வாதிகளே நீங்க மக்களை ஏமாற்றி சேர்த்து வைத்திருக்கிற எல்லாவற்றையும் அவங்களுக்கே கொண்டு வந்து கொடுங்க. 


இந்த நாட்டில போராட்டம் மட்டுமே நிறைந்து இருக்கு. மக்கள் உழைக்கிற காசு எல்லாம் வரி என்ற பெயரில் எங்கேயோ ஒரு இடத்திற்குப் போகுது என்றால் கட்டாயம் அவங்களுக்கு அந்த மன வேதனை இருக்கத்தான் செய்யும். 

15 வருடத்திற்கு முன்னால பைக் இல் பின்னால உட்கார்ந்து இருந்து வந்தவனெல்லாம் இன்னைக்கு பல கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கான். நல்லவர்கள் இருந்தால் கண்டிப்பாக அந்த நாடு செழிப்பாக இருக்கும். அரசாங்கத்திற்கு ஒரு யோசனை சொல்லுறேன் குடிகாரனுக்கு எங்க கடை வைத்தாலும் குடிப்பான், நீங்க ஒண்ணு பண்ணுங்க சுடுகாட்டில் போய்ட்டு மதுக்கடை வையுங்க, அதை விட்டிட்டு போராட்டம் பண்ணியும், அவங்கள மிரட்டியும் பொதுமக்களை தொந்தரவு பண்ணாதீங்க. 


அரசாங்கம் எப்படி இருந்தாலும் அரசு சார்ந்த அதிகாரிகள் தெளிவாக இருக்க வேண்டும். சட்டதிட்டங்கள் அனைத்தும் காமெடியாக இருக்காமல் மக்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும்" என்கிறார்.

அதுமட்டுமல்லாது "இதெல்லாம் நான் பேசணும் என்பதற்காக பேசல, என் மனதில இருக்கிற வேதனைகளைத்தான் கொட்டித் தீர்த்துக்கிறேன்" எனவும் இறுதியாக கூறி முடித்துள்ளார் மயில்சாமி.

Advertisement

Advertisement

Advertisement