• Apr 25 2024

மவனே இனிமேல் குத்திறது எல்லாம் ப்ரஸ்ஷாகத் தான் செய்வேன்- தில்லாக பெஃட் கட்டிய அசீம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் அரண்மனை என்னும் டாஸ்க் நடைபெற்றது. அதில் அசீம் ஏடிகேவுடன் மோதலில் ஈடுபட்ட விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அடுத்து இந்த வாரம் நீதி மன்றம் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு போட்டியாளர்களும் மெயின் டோர் கேமரா வழியாக தங்களுடைய வழக்கை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவருக்கான வழக்கை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகளை அசீம் படிக்கிறார்.


போட்டியாளர்கள் அனைவரும் கேமரா முன்பு தங்களுடைய வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.இது ஒரு புறம் இருக்க இந்த வாரத்தில் தலைவராக மைனா நந்தினி தேர்வாகியிருக்கிறார்.இவர்களின் தெரிவு நியாயமற்றது என தனலக்ஷமி சண்டை பிடித்திருந்தார்.

இது ஒரு புறம் இருக்க அசீம் ரச்சிதாவிடம் பேசிட்டு இருக்கும் போது இனிமேல் மவனே குத்திறது எல்லாம் ப்ரஸ்ஷாகத் தான் நாமினேஷன் செய்யப் போகின்றேன். எல்லாரும் மக்களிடம் போயிட்டு வரட்டும்.என்று தில்லாகப் பேசியிருக்கிறார். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement