• Apr 25 2024

இயக்குநர் உடன் மோதலால் திடீரென நிறுத்தப்பட்ட மாவீரன் சூட்டிங்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.இவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்களின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக உருவெடுத்துவருகிறார் சிவகார்த்திகேயன். 

இவர்  நடிப்பில் பிரின்ஸ் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. அந்த படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கி இருந்தார். அடுத்து மண்டேலா பட புகழ் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மாவீரன் என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்தில் சிவகார்த்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் ஜோடியாக  நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது மாவீரன் படத்தின் ஷூட்டிங் கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டுவிட்டது என ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இப் படத்தில் சில காட்சிகளை சிவகார்த்திகேயன் மாற்ற சொன்னதாகவும், அதற்கு இயக்குநர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது என தெரிகிறது. 

இருப்பினும் ஷூட்டிங் நின்றதற்கான காரணம் என்ன என்பதை பற்றி படக்குழு விளக்கினால் தான் உண்மை தெரியவரும்.

Advertisement

Advertisement

Advertisement