விக்ரமின் மகான் படம் பற்றிய மாஸான அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்

73

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமான மாஸ் நடிகர் தான் விக்ரம். இவர் நடிப்பில் வெளியாகியிருந்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அத்தோடு வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிப்பதில் சிறந்தவராகவும் விளங்குகின்றார்.

மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது ‘மகான்’என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதோடு இப்படம் விக்ரமின் 60 வது படம் என்பதால் இவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவருடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமீபத்தில் தகவல் பரவி இருந்தது. இந்த மாத இறுதியில் அமேசான் ப்ரைமில் படம் நேரடியாக வரும் என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் படத்தின் ரிலீஸ் பற்றி பேசி இருக்கிறார். “எங்கள் படம் மஹான் ரெடி ஆகிவிட்டது, விரைவில் ரிலீஸ் ஆகும்” என தெரிவித்து உள்ளார். “Our film #Mahaan is all ready and delivered….. Will be released very Soon….. Can’t wait to show the film to you all…. Release updates and Promotions on the way Sooner!” என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் தற்போது சென்சார் முடிந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. படம் 2 மணி 43 நிமிடம் ரன் டைம் என்கிற தகவலும் கிடைத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: