• Apr 20 2024

அரை குறை ஆடைப் பெண்ணுக்கு மொபைல் நம்பர் கொடுத்து ரிப்ளை.. சர்ச்சையில் மாரிமுத்து.. மகன் கொடுத்த அதிரடி விளக்கம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் மாரிமுத்து. இவர் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமல்லாது இவர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற பல படங்களையும் இயக்கியுள்ளார்.

மேலும் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். மேலும் இவர் நடிக்கும் குணசேகர் என்ற அந்தக் கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.


இந்நிலையில் சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் கவர்ச்சி புகைப்படம் பதிவிட்டு can i call you என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயருடன் கூடிய டுவிட்டர் கணக்கு ஒன்றில் இருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 


அந்த ரிப்ளையில் yes என பதிலளித்து மாரிமுத்துவின் மொபைல் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ஷாக்கிங் விஷயம் என்னவென்றால் அது உண்மையிலேயே நடிகர் மாரிமுத்துவின் உடைய மொபைல் நம்பர் தான். அந்த நம்பர் ட்ரூ காலரில் தேடிப்பார்த்து அது அவரது நம்பர் என்பது பலருக்கும் உறுதியானதால் தான் இந்த டுவிட் வைரல் ஆனது. 


இது கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகிவந்த நிலையில், இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் டுவிட்டரில் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். அந்தப் பதிவில் அவர் "அது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் போன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார் அவரின் இந்த விளக்கத்துக்கு பின்னர் அந்த போலி பதிவு டெலிட் செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement