• Sep 27 2023

தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்த மாரிமுத்து- வைரலாகும் போட்டோ

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வரும் மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பு காரணமாக தன்னுடைய 57 வயதில் உயிரிழந்தார். இவர் மறைவுக்கு பின்னர் இவர் பற்றிய பல தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 

துணை இயக்குநராக கவனம் பெற்ற இயக்குநர் மாரிமுத்து, பின்னர் திரை உலகில் இயக்குநராகவும் அறிமுகமானார். இவரின் துரதிஷ்டம் இவர் இயக்கிய 'கண்ணும் கண்ணும்' மற்றும் 'புலிவால்' ஆகிய படங்கள் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. 


திரை உலகில் இவருக்கு கிடைத்திராத அங்கீகாரத்தையும், புகழையும் பெற்று தந்தது என்றால் அது எதிர்நீச்சல் சீரியல்தான். எதிர்நீச்சல் சீரியலில் ஆணாதிக்கம் கொண்ட ஒருவராக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் உண்மையில் இவர் பெண்களுக்கு அதிகம் மரியாதை கொடுக்கும் நபராம். இந்த சீரியலில் 20 ஆயிரம் சம்பளத்தில் நடிக்க துவங்கி, தற்போது இந்த தொடரில் அதிக சம்பளம் வாங்கும் நபராக உயர்ந்துள்ளார். இவரின் இறப்பு அனைவருக்கும் சோகத்தையே கொடுத்துள்ளது.


இப்படியான நிலையில் மாரிமுத்து கடைசியாக நடித்த ‘விழா நாயகன்' படத்தில், தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement