• Apr 19 2024

முக்கனிகளில் ஒன்றை “கேக்”ஆகமாற்றிய மன்சூர்அலிகான்; பிறந்த நாளை விசித்திர நாளாக மாற்றிய வீடியோ வைரல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக அறிமுகமாகியவர் தான் மன்சூர் அலி கான்.இவர் தற்பொழுது வில்லனாக நடிக்காது காமெடியனாக நடித்து வருகின்றார்.இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கைதி படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தார்.

ஆனால், அப்போதைக்கு மன்சூர் அலி கான் தயக்கம் காட்டிய நிலையில், கார்த்தி நடித்தார். இதனால் அப்போது மீண்டும் லோகேஷுடன் இணைவேன் என்று எதிர்பார்த்திருந்தார்.


அதன்படி தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் அண்மையில் மன்சூர் அலி கான் கோட் சூட் அணிந்து லியோ சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் மன்சூர் அலி கான் எதை செய்தாலும் புதுமையாக செய்ய வேண்டும் என நினைப்பவர். முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. 


லியோ படத்தின் ஆன்போர்ட் அறிவிப்பிலேயே மன்சூர் அலி கான் பேசியது மட்டுமே தமிழில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், பலாப்பழம் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ள மன்சூர் அலி கானுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement