• Apr 24 2024

இறந்த மனோபாலாவின் உடல் தகனம் இன்று இல்லையா..? எப்போது..? உறவினர்கள் மூலம் வெளிவந்த தகவல்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்றைய தினம் காலமானார். அந்தவகையில் 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 


இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் யாருமே எதிர்பாராத நேரத்தில் இன்று அவர் உயிர் பிரிந்தது. இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இவரது உடலானது நாளை காலை 10மணிக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement