• Apr 25 2024

மணிசேர் என்றால் சும்மாவா பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்க்க குடும்பத்துடன் சென்ற ரோபோ ஷங்கர்

stella / 11 months ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதேபோல் லைகா நிறுவனம் தான் இப்படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்து உள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று உலகமெங்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.


பொன்னியின் செல்வன் 2 படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. 2டி-யில் பார்ப்பதை விடவும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படத்தில் நடித்த கார்த்தி விக்ரம் ஜெயராம் ஜெயம் ரவி எனப் பலரும் இப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்துள்ளனர்.


இப்படியான நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை நடிகர் ரோபோ ஷங்கர் தனது குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார்.படத்தை பார்த்த அவர் எலலோருடைய கதாப்பாத்திரமும் நல்லா இருக்கு மணிசேர் என்றால் சும்மாவா என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement