• Mar 25 2023

'குக்வித் கோமாளி'யில் இருந்து திடீரென வெளியேறிய மணிமேகலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

நிகழ்ச்சி தொகுப்பாளர், போட்டியாளர், யூட்யூப் சேனல், சமூக வலைத்தளம் எனப் பன்முகத் திறமை கொண்டு எப்போதும் பிசியாக இருக்கும் மணிமேகலை சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பமான 'குக்வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். 

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தற்போது திடீரென அறிவித்துள்ளார். குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அத்தோடு 'கடினமான முடிவு தான். ஆனால் எடுத்தாகவேண்டிய நிலை" என அவர் கூறி இருக்கிறார்.


மேலும் இப்பதிவில் "குக்வித் கோமாளியின் எனது கடைசி எபிசோட் இன்று ஒளிபரப்பாகிறது. இதில் "நானே வருவேன்" கெட் அப்பில் "நான் வரமாட்டேன்" என்று அறிவிக்கிறேன். 2019 ஆம் ஆண்டு முதல் சீசன் முதல் குக்வித் கோமாளியின் எனது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள் அனைவருமே அபரிமிதமான அன்பைப் கொடுத்திருக்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது "எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சூழ்நிலைகளில் சிறந்த பங்களிப்பை அளிக்க நான் எப்போதும் கூடுதல் முயற்சி எடுக்கிறேன். குக்வித் கோமாளியில்  உங்கள் அனைவரையும் நான் மகிழ்வித்துள்ளேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பு எதிர்பாராதது. நான் என்ன செய்தாலும் உங்களிடம் இருந்து அதே அன்பையே மீண்டும் எதிர்பார்க்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து மணிமேகலை என்ன காரணத்திற்காக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறார் என்ற காரணம் தெரியாமல் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


Advertisement

Advertisement

Advertisement