• Dec 10 2022

அமுதவாணனை அடித்த மணிகண்டன்.. இவ்வளவும் ஸ்க்ரிப்ட்டா...கடைசியில் நடந்தது இது தானாம்..!

Listen News!
Aishu / 4 weeks ago
image
Listen News!

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசன்  போர்க்களமாகவே வெடித்து வருகின்றது.இதில் யார் டஃப் போட்டியாளர், யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்காங்க, யாரு ஃபேர் பிளே விளையாடுறாங்கன்னு கெஸ் பண்ணவே முடியாத படி செம ட்விஸ்ட்டாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது.

அடித்து பிடுங்கும் டாஸ்க்கில் ஏகப்பட்ட அடிகளும், மிதிகளும் போட்டியாளர்களுக்கு விழுந்து வரும் நிலையில், மணிகண்டன் vs அமுதவாணன் சண்டை  பெரிய சண்டையாக வெடித்தது.

ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் ஈஸியா ரசிகர்களை கவர்வார் என எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் முரடனாகவே சுற்றி வருகின்றார். தனலட்சுமியை தள்ளி விட்டு சண்டை போட்ட மணிகண்டன் தற்போது அமுதவாணனை அடித்தே விட்டார் என்கிற பஞ்சாயத்து கிளம்பி இருக்கு.

சத்தியமா நான் பிடுங்க தான் ட்ரை பண்ணேன், உங்களை அடிக்கவே இல்லை என சத்தியம் செய்து மணிகண்டன் சாதித்து இருந்தார்.அதாவது  மிக்சர் தின்னிகளாக இல்லாமல், ஒருத்தர் மட்டுமே டைட்டிலுக்கு சொந்தக்காரர் என்று ஆரம்பத்தில் இருந்தே முடிவு கட்டாமல் தனித்தனியாக ஒவ்வொரு போட்டியாளரும் ஸ்கோர் செய்து வருகின்ற விடயம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

அத்தோடு காமெடியன்னு நினைச்சீங்களா, நான் டெரர் பீஸ் என தொடர்ந்து விக்ரமன், மணிகண்டன் என வரிசையாக ட்ரிக்கர் செய்து அவங்களை ஃபிரேம் பண்ணி வருகிறார் அமுதவாணன் என்கிற குற்றச்சாட்டை சண்டையின் போது மணிகண்டன் வெளிப்படையாகவே கூறி விட்டார்.

பெல்ட் போகிற இடத்துல உங்கள குத்துனேன்னா என மணிகண்டன் கேட்க, ஆமாம் குத்துன மணி என அமுதவாணன் எகிற, ரூடா தான் விளையாண்ட மணி என மகேஸ்வரியும் மணிகண்டன் செய்தது தான் தவறு என அமுதவாணனுக்கு ஆதரவாக பேசிய காட்சிகள் வெளியாகி இருந்தது.



விஜய் டிவி ரசிகர்களுக்கான இன்றைய முதல் ப்ரோமோவில் வரும் காட்சிகள் 24 மணி நேர டிஸ்னி ஹாட்ஸ்டாரில் முடிந்து தனலட்சுமியும் மணிகண்டனும் எப்படி ஒன்றாக சேர்ந்தார்களோ அதே போல அமுதுவும் மணிகண்டனும் ஒண்ணா சேர்ந்துட்டாங்க.அத்தோடு நீங்க ரொம்ப லேட் பாஸ் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும் பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் படி சகஜம் தானே என கூறி கலாய்த்து வருகிறார்கள்.