• Dec 10 2022

பொன்னியின் செல்வன் 2 காட்சிகளை மீண்டும் எடுக்கும் மணிரத்னம்-வெளியானது தகவல்..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

மணிரத்னம் இயக்கிய படு பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆனது.

இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.

பாக்ஸ் ஆபிசில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது பொன்னியின் செல்வன்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என மணிரத்னம் அறிவித்து இருக்கிறார்.

2ம் பாகத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது என முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போது மணிரத்னம் சில காட்சிகளை மீண்டும் எடுக்க போகிறார் என தகவல் கசிந்துள்ளது.

இந்த ஷூட்டிங் சுமார் ஏழு முதல் பத்து நாட்கள் நடைபெறலாம் என கூறப்படுகின்றது.