• Apr 19 2024

கௌதம் மஞ்சிமா திருமணத்தில் மணிரத்னம் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள்...தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக இடம்பெற்றது.

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். எனினும் அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். எனினும் தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர்.அத்தோடு  தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தனர்.


நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது.  அத்தோடு நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வாழ்த்துகளையும் பெற்றன.


இவ்வாறுஇருக்கையில்  கௌதம் கார்த்திக்கை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இந்த திருமணத்திற்கு வந்துள்ளனர்.



இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது போட்டோகிராபர் ஜாக்சன் ஜேம்ஸ் அணியினர் திருமணத்தில் இயக்குநர் மணிரத்னம் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.அத்தோடு நடிகர் சிவகார்த்திகேயன் மணமக்களை வாழ்த்திய வீடியோ & புகைப்படமும் வெளியாகி உள்ளது.










Advertisement

Advertisement

Advertisement