• Sep 27 2022

பிரபல தமிழ் நடிகருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா -செம்ம ஹாட்டாக வெளிவந்த புகைப்படங்கள்..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

கேரளாவை பிறப்பிடமாகக் கொண்டவர் நடிகை மாளவிளா மோகனன். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் போட்டோ ஷுட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இது தவிர நிறைய போட்டோ ஷுட், விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்து வருகின்றார். ஹிந்தியில் இரண்டு படமும், மலையாளத்தில் இரண்டு படமும் கன்னடத்தில் ஒரு படமும் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாளவிகாவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 4ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், தன்னுடைய நண்பர்கள் மற்றும் நெருக்கமான சில பிரபலங்களுக்கு மும்பையில் பார்ட்டி கொடுத்தார். இதில் கலந்து கொள்ள விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டவே அவர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

அப்போது மாஸ்டர் பவானியுடன் மாளவிகா மோகனன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மாஸ்டர் ரியூனியனா? என பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் விஜய் சேதுபதியை தவிர சில பாலிவுட் பிரபலங்களும், மாளவிகா மோகனனின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு தன்னுடைய பிறந்தநாளில் ஒரு பக்கம் கை இல்லாத ஸ்லீவ் லெஸ் மாடர்ன் உடையில்… செம்ம ஹாட்டாக இருக்கிறார் மாளவிகா. இவரது அழகை வர்ணித்து நெட்டிசன்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%