• Apr 20 2024

விவாகரத்தான பெண் என்றால் கீழ்த்தரமாகப் பார்க்கிறார்கள்... மனம் திறந்து பேசிய மலைகா அரோரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் கவர்ச்சி குத்தாட்ட நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மலைகா அரோரா. இவர் 1998 இல் மணிரத்னம் இயக்கத்தில், மற்றும் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான 'உயிரே' என்ற படத்தில் இடம்பெற்ற 'தக்க தையா தையா..' பாடலுக்கு ரயிலில் நடனமாடி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது சில படங்களில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.

இவ்வாறாக சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு 1998ம் ஆண்டு பாலிவுட்டின் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டனர். மேலும் 2002 இல் இந்த தம்பதியினருக்கு அர்ஹான் எனும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. 


இருப்பினும் கடந்த 2017-ஆம் ஆண்டு மலைகா அரோராவுக்கும் அர்பாஸ் கான் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து நிரந்தரமாக பிரிந்தனர். ஆனாலும் இன்றுவரை மகனை தனது கஸ்டடியில் வைத்து வளர்த்து வருகிறார் மலைகா அரோரா.

தற்போது 49 வயதை கடந்து விட்ட நடிகை மலைகா அரோரா போனி கபூர் மகன் அர்ஜுன் கபூரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றார். ஆனால் இவர்களின் இந்தக் காதல் பாலிவுட் வட்டாரத்தில் பெருமளவு ட்ரோல் செய்யபட்டு வருகிறது. அடிக்கடி இருவரும் பிரேக்கப் செய்து கொண்டதாக வதந்திகளையும் பரப்பி மலைகா அரோராவை கடும் அப்செட்டில் ஆக்கி இருந்தனர்.


இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மலைகா தன்மீதான ட்ரோல்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது "ஆண்கள் விவாகரத்து செய்து விட்டு எத்தனை திருமணம் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். முன்னணி நடிகர்களாக அவர்கள் மதிக்கப்படுவார்கள். ஆனால், அதையே ஒரு பெண் விவாகரத்து செய்தால் இப்பவும் அவளை கீழ்த்தரமாக பார்க்கும் எண்ணம் தான் இந்த சமூகத்தில் நிலவி வருகிறது" எனக் கூறியிருந்தார்.


அதுமட்டுமல்லாது "விவாகரத்தான பெண்கள் மற்றும் சிங்கிள் மதரின் நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது. தினமும் என்னைப் பற்றிய ட்ரோல்கள் சோஷியல் மீடியாவில் நிறைய குவிந்து வந்தாலும், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் புத்தி அவ்வளவு தான் என கடந்து சென்று விடுவேன்" எனவும் துணிச்சலாக கூறி இருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement