• Apr 24 2024

'மாகாபா, நான் விஜய் டிவியை விட்டுட்டு போறேன்'-புதிய தொகுப்பாளினி வரவால் திடீர் முடிவெடுத்த ப்ரியங்கா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8.

இந்த நிகழ்ச்சியினை ப்ரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர்தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த ஷோவில் தற்போது உலக இசை திருவிழா என்கிற பெயரில் வெளிநாட்டில் இருந்து கலைஞர்கள் வந்திருக்கிறார்கள்.

அதில் மிகா என்ற பெண்ணிடம் மாகாபா ஆனந்த் காமெடியாக பேசுகிறார். இனிமேல் ஆங்கர் பிகா (ப்ரியங்கா) இல்லை மிகா தான் என கூறுகிறார்.

மாகாபா அப்படியே பேசிக்கொண்டிருக்க 'நான் விஜய் டிவியை விட்டுட்டு போறேன்' என்று காமெடியாக பிரியங்கா கூறுவதும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் பார்க்கலாம். இதோ அந்த புரோமோ

Advertisement

Advertisement

Advertisement