மாகாபா ஆனந்திற்கு கை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம்- வைரலாகி வரும் புகைப்படம்

484

சமீபகாலமாக சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்களைப் போல சின்னத்திரையில் வளர்ந்து வரும் பிரபலங்களுக்கும் மக்கள் தமது பேராதரவைக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை சூப்பராக தொகுத்து வழங்கக் கூடிய பல தொகுப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஆண் தொகுப்பாளர்களில் இப்போது படு பிஸியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் தான் மாகாபா ஆனந்த்

மேலும் விஜய் டிவியில் கொரோனா லாக் டவுனுக்கு பிறகு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன.அப்படி எந்த நிகழ்ச்சி எடுத்தாலும் மாகாபா வந்துவிடுகிறார், மேலும் இவர் தொகுப்பாளினி ப்ரியங்காவுடன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகள் பல ரசிகர்களைக் கவர்ந்திருப்பதும் தெரிந்ததே.

மேலும் இப்போது தொடர்ந்து பணிபுரிந்து வந்த மாகாபாவிற்கு கை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. திடீரென எப்படி ஆனது என்பது தெரியவில்லை, எலும்பு முறிவு புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அதைப்பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் விரைவில் குணமடையுங்கள் என கமெண்ட் போட்டு வருவதோடு எப்படி விரலில் முறிவு ஏற்பட்டது எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.