• Apr 23 2024

கடுப்பில் கத்திக்கொண்டு வீட்டை சுற்றும் மைனா-கடைசியில் அசீமிற்குமா..வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் என இரண்டு அணிகளாகப் பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வந்தனர். இப்பொது அந்த டாஸ்க் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் ஸ்ரோர் ரூமிக்குள் இருந்து இரண்டு அட்டைகளை எடுத்து வரச் சொல்ல மணிகண்டன் அதனை எடுத்து வருகின்றார்.அந்த இரண்டு அட்டைகளில் ஒரு அட்டையை அசீமிற்கும் மற்ற அட்டையை மைனா கழுத்திலும் மாட்டிவிடுங்க என பிக்பாஸ் கூறுகின்றார்.

அதில் SIMPLY WASTE என எழுதி இருந்தது.அதில் கடுப்பான மைனா யாரட SIMPLY WASTE எண்டு சொல்றீங்க...எவ்வளவு பேர்  WASTE  உட்கார்ந்து இருக்கிறீங்க எண்டு பாருங்க என கத்திக்கொண்டே வீட்டை சுற்றுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement