• Apr 19 2024

கையில் கட்டுடன் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ்-திடீரென அவர் எடுத்த முடிவு..ஷாக்கில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவரே நடிகை நந்தினி. அன்று முதல் இவர் ரசிகர்களால் மைனா நந்தினி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இணைந்து நடித்திருந்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்துப் புகழ் பெற்றிருந்தார். 

அதுமட்டுமல்லாது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்திலும் நடித்திருக்கின்றார். அத்தோடு தற்போது வெளியாகியுள்ள 'விக்ரம்' படத்திலும் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருக்கின்றார்.தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குநராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.


கடைசியாக Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் யோகேஷுடன் இணைந்து கலக்கினார். எனினும் இப்போது பிக்பாஸ் 6வது சீசன் வீட்டிற்குள் நுழைந்து சூப்பராக விளையாடி வருகிறார்.

தற்போது மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் கையில் கட்டுடன் ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார். தனது தோழில் ஏற்பட்ட காயம் காரணமாக டேன்ஸ் ஜோடி டேன்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற முடியாது என பதிவு செய்துள்ளார்.இது ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Advertisement

Advertisement

Advertisement