• Apr 20 2024

கலர்ஃபுல் சேலையில் கலக்கல் போட்டோவை வெளியிட்ட மகாலட்சுமி-வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜேவாக வலம் வந்தவர் தான் மகாலட்சுமி.இதனைத் தொடர்ந்து சீரியல்களில் வாய்ப்புக் கிடைத்ததை அடுத்து நெக்கட்டிவ் ரோல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பல டாப் சீரியல்களில் வில்லி கதாப்பாத்திரத்தில் பட்டையை கிளப்பி வரும் இவர் அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு சச்சின் என்ற ஒரு மகன் உள்ள நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.


இந்நிலையில் லிப்ரா ப்ரடெக்ஷன்ஸ் ரவீந்தரை காதலித்து வந்த மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மகாலட்சுமி அவ்வப்போது தங்களின் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.


அந்த வகையில் தற்போது கலர்ஃபுல் சேலையில் கலக்கல் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் மகாலட்சுமி. சேலையை விளம்பரப்படுத்தும் வகையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள மகாலட்சுமி, உலகிற்கு பொருந்துவதற்காக நான் இங்கு இல்லை, எனது சொந்த உலகை உருவாக்க இங்கே இருக்கிறேன்... என கேப்ஷன் கொடுத்துள்ளார்.


மகாலட்சுமியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், வாவ் என வாயை பிளந்துள்ளனர். இந்த சேலையில் அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றும் செம் அழகு, ஸ்டன்னிங், கார்ஜியஸ், அழகி , வாவ் என வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement