• Apr 20 2024

மாதவனின் பிரமாண்டமான புதிய வீடு... புகைப்படத்தைப் பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களால் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் தான் மாதவன். இவர் நடிப்பில் உருவான 'அலைபாயுதே' படம் இன்றும் யாராலும் மறக்க முடியாது. மேலும் அந்த படத்திற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு தற்போது எந்த ஒரு படமும் இல்லை என்று தான் உண்மையாக கூற வேண்டும்.


அதிலும் குறிப்பாக அப்படத்தில் காதில் ஹெட்செட் போட்டுக்கொண்டு பைக்கில் வரும் மாதவனின் அறிமுக காட்சியை இப்போதும் ரசிகர்கள் பலரும் ரசிக்கிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து அதிகமாக காதல் கதைகளில் நடித்து வந்த மாதவன் தற்போது தனது ரூட்டை மாற்றி வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட படங்களில் நடித்து வருகின்றார்.


சிறிது காலமாக அவர் நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் ஆகவில்லை. இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று' என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. 

இவ்வாறாக பல படங்களில் நடித்து வந்த மாதவன் இந்திய அளவில் சிறப்பான நடிகராக தற்போது தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அந்தவகையில் கதாநாயகனாக இருந்து இயக்குநராகவும் சமீபத்தில் முன்னேறி இருக்கின்றார். அதாவது அண்மையில் மாதவன் ராக்கெட்ரி என்ற படத்தை தானே இயக்கியும், நடித்தும் உள்ளார்.


இதனைத் தொடர்ந்து தற்போது மாதவன் தனது அடுத்த அடுத்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது புதியதாகத் தான் கட்டியுள்ள வீட்டின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு "வீடு...அடுத்த கதை எழுத ஆரம்பித்தேன்" என பதிவு செய்துள்ளார்.


அந்த வீட்டின் உடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "அட மாதவனின் வீடா இது செமயாக இருக்கிறதே" என கமெண்ட் செய்து அப்புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement