• Apr 23 2024

வெளியாகிறது 'மாவீரன்' படத்தின் புதிய அப்டேட்... அதுவும் இன்று மாலையா..? படக்குழு அறிவிப்பு..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது 'மாவீரன்' திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை 'மண்டேலா' பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். அத்தோடு இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.


மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.  மேலும் இப்படத்தில் சரிதா, சுனில், இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இணைந்து நடிக்கின்றனர். 


இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தது. அந்தவகையில் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement