• Apr 20 2024

யாருமே எதிர்பாராத நேரத்தில்... 'லவ் டுடே' செய்த மாபெரும் சாதனை... தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடியா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ரசிகர்களைக் கவர்ந்த படம் என்றால் அது சமீபத்தில் வெளிவந்த 'லவ் டுடே' படம் தான். இப்படத்தை 'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி இதில் நடித்தும் இருக்கிறார். மேலும் லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்களுக்கு அதிகரித்து வந்தது.


அதாவது செல்போன் மாறிய பிறகு அவர்களின் காதல் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும். நவம்பர் 4-ஆம் தேதி வெளியான இத்திரைப்படமானது முதல் நாளில் பெரிதாக கலெக்சன் எதுவும் இல்லை. ஆனால் பின்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொடுத்த நல்ல விமர்சனத்தை அடுத்து, அதிகமான திரையரங்கில் படம் திரையிடப்பட்டன. 


தற்போது இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அந்தவகையில் இப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்து சில நாட்களிலேயே பல கோடியை ஈட்டி சாதனை படைத்துள்ளது.


இந்நிலையில் இப்படத்தினுடைய தமிழக வசூல் விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 48 கோடியை கடந்து மாபெரும் வசூல் சாதனையை லவ் டுடே திரைப்படம் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement