• Apr 20 2024

நான்கு நாட்களில் வசூலை அள்ளி குவித்த லவ் டுடே.. வேற லெவல்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

இவானா தமிழ் திரைப்பட நடிகை ஆவார். மேலும் மேலும் இவர் ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்தார். 


மேலும் இயக்குநர் பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் இவானா. இதில் இவர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப் படம் பெரிதாக ஓடாததால் இவரும் வெளியில் தெரியாமல் போனார்.


இதைத்தொடர்ந்து தற்போது லவ் டுடே படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவானா. தற்போது உள்ள இளைய சமுதாயத்தில் காதல் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை இப்படம் அருமையாக காட்டியிருந்தது.


இப் படத்தில் ஜோடிகள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வரும் என்பதை தெளிவாக இப் படம் காட்டுகிறது. மேலும் லவ் டுடே படம் தற்போது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 


மேலும் இப் படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். நகைச்சுவை மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் யோகி பாபு.


இந்நலையில் லவ் டுடே படம் கடந்த நான்கு நாட்களில் ரூ. 17 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement