• Apr 25 2024

ஹிந்தியிலும் ரீமேக் ஆகும் லவ் டுடே திரைப்படம்- இதனை இயக்கப் போவது யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பிரதீப் ரங்கநாதன். மேலும் இவர் எதிர்பார்த்த அளவை விட கோமாளி படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இதனை அடுத்து இவரே இயக்கி நடித்து வெளியாகிய திரைப்படம் தான் லவ் டுடே. கடந்த வாரம் வெளியாகிய இப்படம் முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த படத்தின் பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம் ஈட்டும் என்றும் சொல்லப்படுகிறது. 


இதுபோல ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ரீமேக் உரிமைகள் மூலமாக கூடுதலாக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் 8 நாட்களில் இந்த படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரபல நடிகர்கள் இல்லாமல் புதுமுகங்கள் நடித்த படத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில், அதையும் இயக்க பிரதீப்பையே தயாரிப்பு நிறுவனம் அனுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement