விபத்திலிருந்து மீண்டு வந்த யாஷிகா முதல் முதலாக எங்கு சென்றுள்ளார் என்று பாருங்க

2490

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் எல்லாம் ஹிட்டானவை எனலாம். அந்த வகையில் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந் நிகழ்ச்சியானது இது வரைக்கும் 4 சீசன்களைக் கடந்துள்ளது.

மேலும் பிக்பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராகக் கலந்து கொண்டவர் தான் யாஷிகா ஆனந்த். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் என்பது தெரிந்ததே. அத்தோடு விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார் என்பதும் தெரிந்ததே.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் பயணம் செய்த யாஷிகா பயங்கர விபத்தில் சிக்கினார். இதனால் அவருடன் பயணம் செய்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு முதுகு எலும்பு, கால் எழும்பு என நிறைய எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இதனால் 2, 3 சர்ஜரி பிறகு வீட்டிலேயே இருந்தார்,

அத்தோடு 6 மாதம் நடக்க முடியாமல் படுத்த படுக்கையிலேயே இருந்தார். அவ்வப்போது நடக்க பயிற்சி செய்யும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது உடல்நிலை தேறியுள்ள அவர் புதிய கடையின் திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர அவரது ரசிகர்கள் யாஷிகாவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.