• Feb 01 2023

அட நம்ம தளபதி என்ன செய்யிறாரு எண்டு பாருங்க.. ஷாம் பகிர்ந்த Unseen வீடியோ!

Listen News!
Aishu / 2 weeks ago
image

Advertisement

Listen News!

வாரிசு படத்தின் 7 நாள் வசூல் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் ஷாம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி அன்று வெளியாகி இருந்தது. இந்த படத்தை இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து அசத்தி இருந்தனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அத்தோடு இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்துள்ளனர். எஸ் தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் விஜய்யின் படத்திற்கு தமன் இசையமைப்பது இது தான் முதல் முறை.


அத்தோடு வாரிசு திரைப்படம் வெளியான நாள் முதல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது.அத்தோடு  அது மட்டுமல்லாமல், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பல இடங்களில் நிறைய வசூல் சாதனைகளையும் வாரிசு திரைப்படம் படைத்து வருகின்றது.

முன்னதாக, வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனமான SVC அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு ஏற்கனவே அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு சகோதரராக நடித்துள்ள ஷாம், வாரிசு திரைப்படம் 210 கோடி ரூபாய் வசூல் செய்ததை குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் இருக்கும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அத்தோடு அந்த வீடியோவில் Golf Cart ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் ஷாம் ஆகியோர் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல், இந்த வண்டியை விஜய் தான் ஓட்டவும் செய்கிறார். வாரிசு படத்தின் ஷூட்டிங்கின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.


Advertisement

Advertisement

Advertisement