• Mar 28 2023

சல்மான்கானுடன் இணையும் லோகேஷ்; கைதி 2 இயக்குவது எப்போது?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, அவர் அடுத்ததாக பாலிவுட் சென்று சல்மான் கானை வைத்து அதிரடியான ஆக்சன் திரைப்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

ஏற்கனவே, படத்திற்கான கதையை சல்மான் கானிடம் கூறி  லோகேஷ் சம்மதம் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் சல்மான் கானை அவர் வைத்து இயக்கும் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு லோகேஷ் 50 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

50 கோடி என்பது தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சில நடிகர்கள் வாங்கும் சம்பளம் எனவே லோகேஷ் கனகராஜின் வளர்ச்சியை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். 

மேலும், லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை முடித்த பிறகு சல்மான் கானை வைத்து படம் இயக்குவார் என்றால் கைதி 2 படத்தை எப்போது இயக்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement