• Apr 25 2024

டேய் முதலில படத்தை நிம்மதியாக எடுக்க விடுங்கடா... கதறும் லோகேஷ் கனகராஜ்.. படு வைரலாகும் மீம்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு' படமானது தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தின் உடைய வெற்றிக் கொண்டாட்டம் கூட இன்னும் முடிவடையவில்லை. இதற்கிடையில் தற்போது விஜய்யின் அடுத்தப்படத்தின் சூட்டிங் தொடங்கியுள்ளது.


தளபதி விஜய் இந்தப் படத்தில் 50 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும் இந்தப் படம் தன்னுடைய 100 சதவிகித படமாக இருக்கும் என்றும் முன்னதாக லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.


இந்நிலையில் சமூக வலைதளங்களில் விஜய்யின் கேரக்டர் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் கைதி கார்த்தியுடன் ஜெயிலில் இருந்தவர்தான் விஜய் என்றும் ஏஜெண்ட் விக்ரமின் ஸ்டூடண்ட்தான் விஜய் என்றும் விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை காட்டிலும் விஜய்யின் கேரக்டர் தளபதி 67இல் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பது போன்ற பல யூகங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன.


இவ்வாறான யூகங்களை போட்டு, லோகேஷ் கனகராஜ் "டேய் படத்தை நிம்மதியாக எடுக்க விடுங்கடா" என்று கதறுவது போல ஒரு மீம்ஸ் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது இதனிடையே இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள ரசிகர் ஒருவர், படம் வெளியாகும் வரை இப்படித்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


இவ்வாறாக தளபதி 67 குறித்த பல மீம்ஸ்கள் வெளியாகி படு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement