• Apr 25 2024

“ அந்த விஷயத்தில் லோகேஷ் கனகராஜ்தான் பெஸ்ட்.. ” பத்திரிகையாளர் சந்திப்பில் பல விஷயங்களை பேசிய சிம்பு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு, பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கவுதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது பத்து தல படம்.மேலும் இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

மேலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகர் சிம்பு படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

நடிகர் சிம்பு, பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கவுதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது பத்து தல. அத்தோடு இந்தப் படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது பத்து தல. முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த வெந்து தணிந்தது காடு படத்திலும் சிம்பு கேங்ஸ்டராக நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

அத்தோடு வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் படத்தில் சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன. முன்னதாக சிம்புவின் மாநாடு படமும் சிறப்பான வெற்றியை பெற்றது. அடுத்தடுத்த இரு படங்கள் சிறப்பான வெற்றியை சிம்புவிற்கு கொடுத்துள்ள நிலையில் பத்து தல படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏஆர் ரஹ்மான் இசையில் பத்து தல படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் மிகவும் ஸ்லிம்மாக மாறிய சிம்புவை பார்க்க முடிந்தது. அத்தோடு நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமாக காணப்பட்ட சிம்புவின் பேச்சிலும் வித்தியாசம் காணப்பட்டது. இனிமேல் தன்னுடைய சிறப்பான பக்கத்தை பார்க்கலாம் என்ற தொனியில் அவர் பேசினார்.

இதனிடையே இன்றைய தினம் பத்து தல படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. மேலும் இதில் சிம்பு, கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இவ் நிகழ்ச்சியில் பேசிய சிம்பு படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் பாராட்டித் தள்ளினார். இப் படத்தின் நடிகர்கள் கௌதம் கார்த்தி, கவுதம் மேனன் என அனைவரின் சிறப்புகளையும் குறிப்பிட்டு பேசினார்.

கௌதம் கார்த்தி ஸ்டண்ட் காட்சிகளில் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக தெரிவித்த சிம்பு, கவுதம் மேனன் இயக்கத்தில் தான் நடித்த வெந்து தணிந்தது காடு படம் குறித்தும் பாராட்டி பேசினார். இதேபோல படத்திற்கு இசையமைத்துள்ள ஏஆர் ரஹ்மானிடம் கற்றுக் கொள்ள அதிகமான விஷயங்கள் உள்ளதாகவும், அவர் இந்த வயதிலும் சிறுபிள்ளை போல பறந்து பறந்து தன்னுடைய கமிட்மெண்ட்களை முடிப்பது வியப்பை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சிம்பு, இந்தப் படத்தில் அதிகமான கேரக்டர்களை வைத்து படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளதாகவும் ஆனால் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகவும் பாராட்டினார்.எனினும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இதுபோல அனைத்து கேரக்டர்களையும் சிறப்பாக லோகேஷ் பயன்படுத்தியிருந்ததையும் பாராட்டி பேசினார் சிம்பு.

Advertisement

Advertisement

Advertisement