• Apr 24 2024

18வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய குட்டி நயன்தாரா- வைரலாகும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்தவர் தான் அனிகா சுரேந்திரன்.இப்படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்து அசத்தி இருந்தார்.


இதையடுத்து ஜெயம் ரவியின் மிருதன், விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்திருந்தார்.அனிகாவுக்கு, அஜித்தின் விஸ்வாசம் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் நயன்தாரா மற்றும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் 


 இதனால் இப்படத்திற்கு பின் இவரை குட்டி நயன் என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர் ரசிகர்கள். மேலும் தற்பொழுது கதாநாயகியாகவும் பல திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகின்றார்.


அதன்படி இவர் புட்ட பொம்மா என்கிற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். இது கப்பேலா என்கிற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். 


இந்நிலையில், நடிகை அனிகா நேற்று தனது 18-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அவர் ஹீரோயின் ஆன பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும். இந்த பிறந்தநாள் விழாவில் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துகொண்டனர்.


இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கருப்பு நிற உடை அணிந்து வந்த அனிகா, பிரம்மாண்ட கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கேக்கில் 18 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement