படப்பிடிப்பு தளத்தில் பெண் வேடத்தில் இருந்த நடிகர் மீது ஆசைப்பட்டு கடத்திய லைட்மேன்!

242

புதுமுக நடிகர் கார்த்திகேயன் வேலுவையும், கன்னட திரையுலக நடிகை சஞ்சனா புர்லியையும் வைத்து ஈஸ்வர் கொற்றவை இயக்கும் திரைப்படம் சூ மந்திரகாளி.

படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் குறித்துஇயக்குநரும், நடிகரும் கூறியது அனைவரையும் வியந்து சிரிக்க வைத்திருக்கிறது.

ஒரு கட்ட படப்பிடிப்பு காட்டுப் பகுதியில் நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்த யானை ஒன்று படக்குழுவினரை துரத்தியிருக்கிறது. பயத்தில் அனைவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் யானை தந்த அதிர்ச்சியோடு லைட்மேனும்
ஒரு அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

சூ மந்திரகாளி படத்தில் கிஷோர் தேவ் பெண் வேடத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பை பார்த்த அனைவரும் கிஷோரை பெண் என்றே நினைத்துள்ளனர்.

ஆனால் லைட்மேனோ ஒருபடி மேலே போய் நடிகை என நினைத்து பெண் வேடமிட்டிருந்த கிஷோர் மீது ஆசைப்பட்டது மட்டுமின்றி கிஷோரை கடத்தியும் விட்டாராம்.

கடைசியில் , நீங்கள் கடத்தியிருப்பது பெண் இல்லை, பெண் வேடமிட்டிருக்கும் நடிகர் கிஷோர் தேவ் என்று லைட்மேனிடம் கூறி அவரை மீட்டுள்ளார்கள். நடிகர் கிஷோருக்கு பெண் வேடம் அவ்வளவுக்கு கச்சிதமாக பொருந்தியிருந்ததாம்.

கிஷோரைப் பெண் என்று எண்ணி லைட்மேன் கடத்திச் சென்ற இந்த சம்பவம் பற்றி கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறதாம்.