• Mar 25 2023

மாமாக்குட்டி இவானாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த LGM படக்குழு ..வைரலாகும் வீடியோ

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவானா, பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ‘லவ் டுடே’ படத்தின் வெற்றியால், இவானாவுக்கு பல சுவாரஸ்யமான படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, தமிழ் சினிமாவில் தல தோனி தயாரிப்பாளராக கால்பதிக்கும் திரைப்படதுக்கு “எல்ஜிஎம் – Lets Get Married” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடிக்க, மூத்த நடிகை நதியா மற்றும் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


இன்று நடிகை இவானாவுக்கு 25வது பிறந்த நாள், தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி  வரும் இவானாவை சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்தி வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவர் நடித்து வரும் ‘Lets Get Married’ படக்குழு இவானாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.


அந்த வீடியோவில், LGM படக்குழு படக்குழு மொத்தமும் தனி தனியாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதில், படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண்,”இந்த பொண்ணு பாக்க தான் சைலன்ட்..ஆனா ரொம்ப வாலு என்று கூறியதோடு, இவானாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த் வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement