• Mar 25 2023

சமுத்திரக்கனியின் படம் தமிழிலா? தெலுங்கிலா ஹிட்; பொறுத்திருந்து பார்ப்போம்

ammu / 1 month ago

Advertisement

Listen News!

பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் வேலைகள் ஆரம்பித்துள்ளது. இது தெலுங்கு படமாகும். இந்த படம் தமிழில் வெளியாகி இருந்த வினோதய சித்தம் படத்தின் ரிமேக் படம் ஆகும். 


வினோதய சித்தம் திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கி அவரே நடித்திருக்கிறார்.  இது கடந்த ஆண்டு வெளியானது. இதில் நடிகர் தம்பி ராமைய்யா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதே திரைப்படத்தை தெலுங்கில் இயக்க உள்ளனர். 


இதில் சமுத்திரக்கனிக்கு பதிலாக பவன் கல்யாண் நடிக்க இருக்கிறார். அவருடைய உறவினரும் தெலுங்கு நடிகருமான சாய் தரம் தேஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.


இவ்வாறு தமிழ் மொழி திரைப்படத்தின் ரீமேக்காக இந்த படம் தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்த படம் வெகு விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது. சில காலத்திற்குள் இது வெளியாகும் என தகவல் பெறப்பட்டுள்ளது. இது தமிழிலா? தெலுங்கிலா? அதிக வெற்றி அடையப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement