• Mar 28 2024

சொன்ன பயந்திட்டேன் என்று சொல்லுவாங்க அதனால தான் அரசியலுக்கு வரல- முதன்முறையாக காரணத்தை சொன்ன ரஜினிகாந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், த.செ. ஞானவேல் இயக்கத்திலும் புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார்.இதனிடையே, சென்னையில் சமீபத்தில் நடந்த தனியார் மருத்துவமனை ஒன்றின் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசி இருந்தார். இதில், தான் அரசியல் வராமல் போனதற்கு காரணம் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பேசி உள்ளார்.


"அரசியலுக்கு நான் வந்தே ஆகணும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கும் போது யாரும் எதிர்பாராத விதமா கொரோனா வந்துருச்சு. நான் Immunosuppressant. மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன். கொரோனா இரண்டாவது அலை ஸ்டார்ட் ஆயிடுச்சு. நான் பாலிடிக்ஸ் கமிட் ஆயிட்டேன். என்னால வெளியே போக முடியாது.

கொரோனா இரண்டாவது அலை, ஜெர்மனி உள்ளிட்ட பல நாட்டுல வந்துட்டுருக்கு. அதே மாதிரி அரசியல் கேம்பைன் போனா கூட பத்து அடி தள்ளி தான் போகணும், மாஸ்க் எல்லாம் போட்டுட்டு தான் போகணும்ங்குறது தான் மருத்துவர் எனக்கு கொடுத்த கட்டுப்பாடு.


நான் வேன் ஏறினாலே முதலில் மாஸ்க் எடுன்னு சொல்லுவாங்க. கூட்டத்தில் பத்து அடில நிக்கிறது வாய்ப்பே கிடையாது. எப்படி செய்ய முடியும். இதை எப்படி நான் வெளியே சொல்றது, சொன்னா நான் பயந்துட்டேன், அரசியல் வருவதற்கு பயந்துட்டான் அப்படிம்பாங்க. இந்த மாதிரி எல்லாம் எனக்கு பயம் வந்தது.

'இப்படி எல்லாம் நீங்க பயப்பட வேண்டாம். ஏங்க எந்த மீடியா, கூப்பிடுங்க நான் வந்து சொல்றேன்னு டாக்டர் சொன்னாரு. உடல் ஆரோக்கியம் தான் இது எல்லாம். இது நம்ம ஒன்னும் பொய் சொல்லல. அதுக்கப்புறம் தான் நான் Open -ஆ அரசியலுக்கு வரலைன்னு சொல்லி இந்த காரணத்தை நான் சொன்னேன்" என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement