• Apr 25 2024

ரச்சிதா-ஷிவின் கூட்டணியை உடைப்போம்..ஒன்றாக கூடிய போட்டியாளர்கள்..வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வருகிறது.அத்தோடு  சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும்  கட்டாயம் உள்ளது.

எனினும் சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் Ticket To Finale டாஸ்கில் 8வது டாஸ்க் இடம்பெறுகின்றது.அதில் இரண்டு ஜோடிகளாக விளையாடுகிறார்கள்.அதில் அசீம் நான் ஷிவினுடன் விளையாடப்போவதாக கூற நான் வரமாட்டேன் எனக் கூறுகின்றார்.ரச்சிதா-ஷிவின் கூட்டணியை உடைப்போம் எனக் கூறுகின்றார்கள்.இப்படியே இரண்டாவது ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...












Advertisement

Advertisement

Advertisement