• Dec 09 2022

“நான் நம்பின மனிதர்கள் என்னை கீழே தள்ளி விட்டுட்டாங்க..”: வேதனையில் புலம்பும் தனுஷ்.!

Listen News!
Aishu / 7 months ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பின் ராட்சசன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது தவிர தற்பொழுது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு 'நானே வருவேன்' படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். மேலும் புதுப்பேட்டை படத்திற்கு பின்னர் இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்.

மேலும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அண்மையில் பிரிவதாக அறிவித்ததது கோலிவுட் வட்டாரத்திற்கே மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய தனுஷ், நான் லைஃப்ல ரொம்ப ரொம்ப நம்பிக்கை வெச்ச நாலு பேர்ல ஒருத்தர் வெற்றிமாறன். மீதி மூனு பேரும் பொண்ணுங்க. அவ்வளவு நம்பிக்கையே நான் யாரு மேலயும் வெச்சது இல்ல. பாக்கி 3 பேரும் என்னை கீழே தள்ளி விட்டுட்டாங்க . என் நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே ஆள் வெற்றிமாறன் மட்டும்தான்.

அதைவிட பெரிய விஷயம் என்னன்னா வெற்றியை சுவைத்ததுக்கு அப்புறம் என்னை மறந்துட்டு போன ஒருத்தர எனக்கு தெரியும். அதைவிட பெரிய வெற்றியைப் பார்த்த வெற்றிமாறன் தனுஷை விட்டு நான் வரமாட்டேன்னு இன்னும் என் கூட இருக்காரு என வெற்றிமாறன் உடனான நட்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் தனுஷ்.இந்த விசயம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்