• Apr 20 2024

விஜய் வீட்டில் நடைபெறவுள்ள லியோ ஷூட்டிங்- வெளியாகிய தகவல்- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் லோகேஷ் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதன் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்துவந்தது. சமீபத்தில்தான் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பியது படக்குழு. இதனையடுத்து சென்னையிலும், ஹைதராபாத்திலும் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது.அதன்படி நாளைய தினம் ஷுட்டிங் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.


இதனை அடுத்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியள்ளது. அதாவது லியோ படத்திற்காக விஜய் வீடு மாதிரி ஒன்றை செட்டை போட்டுள்ளார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐதராபாத்திற்கு படக்குழு செல்லவுள்ளதாகவும் ஐதராபாத்தில் தான் நடிகர் அர்ஜுன் ஷுட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


அத்தோடு எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் படம் காஷ்மீரை மையமாக வைத்தே கதை நகர்ந்து செல்வதாகவும் தவலல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement