• Oct 16 2024

லியோ பாகம் - 2 உருவாகிறதா? வெளியான சூப்பர் அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் 'லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் 'லியோ’ படம் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான டீசர் இருக்கும் என்று கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த தகவல் குறித்து செய்தி விமர்சகர் பிஸ்மி கூற்றுகையில் ;'' லியோ 2 பாகம் உருவாகின்றது என்ற தகவல் உலாவி வருகின்றது.அதற்கான வாய்ப்பில்லை ஆனால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவருடைய படங்களில் வழமையாக படத்தின் இறுதியில் லீடு விடுவது போல் லியோ படத்திற்கும் அப்படி செய்வாரே தவிர லியோ 2-க்கு வாய்ப்பில்லை .அதாவது லோகேஷ் அவருடைய பார்மிலாவை இதிலையும் அப்ளை பண்ணியிருக்காரு அவ்ளோ தான்'''என்றார்.

Advertisement