• Mar 26 2023

லியோ என்பது காஃபி இல்லடா.. அது தளபதி 67 டைட்டில்.. விழுந்து விழுந்து சிரிக்கும் அஜித்.. வைரலாகும் வீடியோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

வாரிசு படம் வெளியாவதற்கு முன்பிருந்தே விஜய் ரசிகர்கள் 'தளபதி 67' படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்தனர். லோகேஷ் - விஜய் கூட்டணியில் இப்படம் உருவாகுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. 


அந்தவகையில் மைக்கேல் பட ப்ரோமோஷனில் பேசிய லோகேஷ் பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி 67 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 3 தினங்களாக தளபதி 67 அப்டேட்டால் சமூக வலைத்தளங்களே திணறி வருகிறது. 

இந்நிலையில் நேற்றைய தினம் தளபதி 67 படத்தின் டைட்டில் 'லியோ' என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த டைட்டிலை, லியோ காஃபியுடன் சேர்த்து நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது லியோ காஃபி என்ற ஹேஷ்டேக்கில் அடுத்தடுத்து பல மீம்ஸ் கண்டெண்டுகளை ட்வீட் செய்து தெறிக்கவிட்டுள்ளனர். 


அதுமட்டுமல்லாது என்ன தான் டைட்டில் மாஸாக இருந்தாலும் 'லியோ' என்ற பெயரைக் கேட்டதும்  காஃபி தான் நினைவில் வருவதாக நெட்டிசன் ஒருவர் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். அத்தோடு கொக்கைன் பவுடர் தேடிப் போகும் விஜய் கடைசியாக லியோ காஃபி பவுடரை கண்டுபிடிப்பது தான் இந்தப் படத்தின் ஒன்லைன் என மற்றோர் நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.


மேலும் "இது லியோ காஃபி குடிப்பவர்கள் கொண்டாடும் வெற்றி, காலத்தை வென்ற ரசனை" என்ற லியோ காஃபியின் கேப்ஷனுடன் கலாய்த்தும் வருகின்றனர். அதேபோல் LCU என சொல்லிட்டு இப்படி லியோ காஃபிய கொண்டு வந்துருக்கீங்க எனவும் பல ரசிகர்கள் கிண்டலாக கேட்டு வருகின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து லியோ காஃபியை வைத்து தளபதி 67 டைட்டிலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது தான் தற்போது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே நெட்டிசன்களை தொடர்ந்து அஜித் ரசிகர்களும் லியோ டைட்டிலை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். 


அந்தவகையில் லியோ டைட்டிலை கேட்டு அஜித் சிரிப்பதை போன்று வீடியோ எடிட் செய்துள்ள அவர்கள், அதனை டிவிட்டரில் ஷேர் செய்து படு வைரலாக்கி வருகின்றனர். அதேசமயத்தில் டெல்லி, விக்ரம், ரோலக்ஸ் போன்ற லோகேஷின் கேரக்டர்களை விட லியோ தரமாக இல்லையென்றும் ஓபனாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement