• Mar 23 2023

மீண்டும் 5 மாதங்கள் கழித்து ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன லெஜண்ட் சரவணன்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர், சரவணன் அருள் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், படத்தில் கூறப்பட்டுள்ள கருத்து தற்போதைய சூழலுக்கு மிகவும் அவசியமான ஒன்று என மக்கள் விமர்சித்து வந்தனர்.


தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது. இருப்பினும் போட்ட பணத்தைக் கூட லெஜெண்ட் சரவணன் எடுக்கவில்லை என  கூறப்பட்ட நிலையில், படத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகை வசூல்  ஆகிவிட்டதாக இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சரவணன் அருள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தி லெஜெண்ட் திரைப்படம் வெளியாகி சுமார் ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும், இவரை வைத்து படம் எடுக்கவும் தயாரிக்கவும் பலர் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.


விரைவில் இவருடைய இரண்டாவது படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது  தி லெஜெண்ட் படம் நாளைய தினம் டிஸ்னி பிளஸ் ஹொஸ்டார் என்னும் ஓடிடித்தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement