• Mar 28 2024

லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?- மூன்று தலைமுறைக்கு காணும் போல இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர்  ஜெர்ரி & ஜெடி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த ஜுலை மாதம் வெளியாகிய திரைப்படம்  தி லெஜண்ட் .தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வெளிநாட்டில் படித்துவிட்டு சொந்த ஊருக்கு வரும் சரவணன், தனது நண்பன் சர்க்கரை நோயால் இறந்துவிட, இந்த நோய்யை ஒட்டுமொத்தமாக அழிக்க குறைந்த விலையில் மருந்து கண்டுபிடிக்கிறார். இதை தெரிந்து கொண்ட, ஒரு கும்பல் இவரை மருந்து தயாரிக்கவிடாமல் தடுக்கிறது .அதை எப்படி எதிர் கொண்டார் என்பது தான் தி லெஜண்ட் திரைப்படத்தின் கதை.


 கடந்த வாரம் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.இந்நிலையில்,லெஜண்ட் சரவணனின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதில், சென்னையில் லெஜண்ட் சரவணனுக்கு பல பிரம்மாண்டமான துணிக்கடைகள் உள்ளன. அதே போல சென்னையில் பல சொகுசு வீடுகளையும் வைத்துள்ளார். 

லெஜண்ட் சரவணனுக்கு இரண்டு பெண்கள், அவர்கள் இருவருக்குமே திருமணமாகிவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊரான திருநெல்வேலியில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி உள்ளார். அந்த வீட்டிற்கு லெஜண்ட் சரவணன் என பெயர் வைத்து இருக்கிறார்.


 இந்த வீட்டில் தான் தி லெஜண்ட் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அண்ணாச்சியின் தற்போதைய சொத்து மதிப்பு மொத்தம் சுமார் 750 மில்லியன் டாலராம். இந்திய மதிப்பில் 6000 ஆயிரம் கோடியளவில் சொத்துக்களை அண்ணாச்சி குவித்து வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..


Advertisement

Advertisement

Advertisement