• Mar 28 2023

உன் மூஞ்சி பன்னி மாதிரி இருக்கு.. கூறிய நபருக்கு செருப்படி கொடுத்த லீனா மணிமேகலை.. வைரலாகும் பதிவு..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சினிமாத் திரையுலகில் கவிஞர், தொகுப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத்திறமை கொண்ட ஒருவராகத் திகழ்ந்து வருபவர் லீனா மணிமேகலை. ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான 'மாதம்மா' என்ற ஆவணப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். 


இதனைத் தொடர்ந்து பல ஆவணப்படங்களை இயக்கி வந்த இவர் 'காளி' என்ற ஆவணப் படத்தையும் இயக்கி வருகின்றார். கடந்தாண்டு இவ் ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் ஒருவர் சிகரெட் புகைப்பதும், கையில்  LGBT சமூகத்தின் கொடியை வைத்திருப்பது போல் அமர்ந்திருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இதனையடுத்து லீனா மணிமேகலையில் இந்த ஆவணப்படத்துக்கு எதிராக பல விமர்சனங்கள் கிளம்பியது. அதுமட்டுமல்லாது கடவுளை அவமதித்ததாக அவர்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாதவராக வலம் வரும் லீனா மணிமேகலை, ட்விட்டரிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். 

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், லீனா மணிமேகலையின் புகைப்படத்தையும் பன்றி ஒன்றின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டு, அவரது முகம் பன்றியை போன்று இருப்பதாக கூறிக் கிண்டலடித்து இருந்தார். தரக்குறைவாக ட்ரோல் செய்த அந்த நெட்டிசனுக்கு சமூக வலைத்தள வாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், லீனா மணிமேகலையே தற்போது அதற்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.


அந்தவகையில் குறிப்பிட்ட நெட்டினுக்கு பதிலடி கொடுத்து லீனா மணிமேகலை வெளியிட்டுள்ள பதிவில் “பன்றிகள் நல்லது செய்கின்றன. உன்னைப் போன்ற ஹேட்டர்கள் செய்யும் அசுத்தங்களை அவை நீக்கி சுத்தமாக்குகின்றன. பன்றிகளிடம் இருந்து கற்றுக்கொள்” என செருப்படி ரிப்ளை கொடுத்து அந்த நெட்டிசனை வாயடைக்க செய்துள்ளார் லீனா மணிமேகலை. 

அவரின் இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. 


Advertisement

Advertisement

Advertisement