போட்டியாளர்களே இல்லாத அணிக்குத் தலைவரா?- சர்வைவரில் இன்று நடந்தது என்ன தெரியுமா?

152

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்குபற்றி வந்த நிலையில் 6பேர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் அனைத்துப் போட்டியாளர்களும் கொம்பர்கள் என்ற பெயரில் ஒரு தீவில் விடப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய தினம் ஓர் போட்டி நடைபெற்றது. அதில் தாயக்கட்டையை அர்ஜுன் உருட்டுவார். இவ்வாறு உருட்டும் போது என்ன இலக்கம் விழுகின்றதோ அந்த இலக்கத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களாய் போய் நிற்க வேண்டும். அத்தோடு இந்த இலக்கங்களுக்கு நேராக சில உணவுகளும் அட்வான்டேச்சுகளும் இருக்கும். அதன்படி இந்த போட்டியில் இனிகோ, அம்ஜித் ,ஜஸ்வர்யா ஆகியோர் அதிக உணவுகளைப் பெற்றுக் கொண்டனர்.

அந்த வகையில் இன்றைய தினம் அடுத்த தலைவர் யார் என்பதற்காக போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஜஸ்வர்யா மற்றும் இனிகோ ஆகியோர் பங்குபற்றினார்கள். அதன்படி போட்டி என்னவென்றால் சர்வைவர் என்று எழுதப்பட்ட சதுரப் பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அடுக்கிய பெட்டிகளை முதலில் கீழே வீழ்த்த வேண்டும்.

இவ்வாறு விழுத்திய பெட்டிகளை மீண்டும் சரியாக அடுக்க வேண்டும். இவ்வாறு சரியாகவும் வேகமாகவும் அடுக்கி இனிகோ வெற்றி பெற்று கோடர்கள் அணிக்குத் தலைவர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.