• Apr 19 2024

தம்மாத்தூண்டு உடையில் கவர்ச்சியை அள்ளிவீசி... விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த லாஸ்லியா

stella / 10 months ago

Advertisement

Listen News!

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிய லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.


 அந்த வகையில் இவர் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்தார் லாஸ்லியா.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தனது சக பிக்பாஸ் போட்டியாளரான தர்ஷன் உடன் கூட்டணி அமைத்த லாஸ்லியா, அவருக்கு ஜோடியாக கூகிள் குட்டப்பா என்கிற திரைப்படத்தில் நடித்தார். 


கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்த இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படம் பிளாப் ஆனதால், லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.


இதையடுத்து சட்டென உடல் எடையை குறைத்த லாஸ்லியா, படவாய்ப்புகளை பிடிப்பதற்காக படிப்படியாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பினார். விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.


தற்போது லாஸ்லியா ஷார்ட் உடையில் கிளாமராக போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அந்த ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது. லாஸ்லியாவா இப்படி என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.  



Advertisement

Advertisement

Advertisement