• Apr 18 2024

கெட்ட பெயர் வாங்கினாலும் பரவாயில்லை என்று தான் செய்தேன்- விலைமாது குறித்து ஓபனாக பேசிய லயா

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் தான் பகாசூரன் . இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் உருவாகிய இப்படத்தில் நடிகை லயாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலமாக உள்ள லயா, பகாசூரன் திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார்.

அதே போல முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்பு, சிறந்த பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில்,பிரபல சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகை லயா அளித்துள்ளார். அதில், பகாசூரன் திரைப்படம் குறித்து நிறைய கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.


மேலும் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் பகாசூரன் படத்தில் நடித்திருந்தது பற்றி பேசிய லயா, "இது ரொம்ப மோசமான ஒரு கேரக்டர். இது யாரும் செய்ய தயங்கக்கூடிய ஒரு கேரக்டர் தான். வளர்ந்து வர்ற ஒரு ஸ்டேஜ்ல இப்படி ஒரு கேரக்டர் எடுத்து நடிக்க வேண்டிய அவசியமே கிடையாது, அதுவும் முதல் படத்துல. சார் இந்த படத்துக்கு கதை வந்து என்கிட்ட முதல் முறை சொல்லும் போது, இந்த கேரக்டர் நான் பண்ணலன்னு சொல்லிட்டு போயிட்டேன். மறுபடி ரெண்டு நாள் கழிச்சு போன் பண்ணி இந்த கேரக்டர் நீங்க பண்ணா நல்லா இருக்கும், அப்படின்னு சொல்லி அதுக்காக சேர்த்து வைத்த Reference எல்லாம் அவரு காட்டும்போது, நான் ஒரு கெட்ட பேர் வாங்கினால் கூட இந்த படத்தோட கரு நல்லா இருந்ததுன்னு தோணுச்சு.

நான் ஒரு சிறந்த நபர்ன்னு நிரூபிக்க மோட்டிவேஷனல் ஸ்பீக்கரும், சோசியல் மீடியாவும் இருக்கு. சிறந்த நடிகை என்பதை காட்ட ஒரு களமா தான் ஒரு சவாலா பண்ணுவோம்ன்னு பண்ணேன்.


ஒரு பாசிட்டிவ்வா நான் பண்ணி இருந்தா கூட இவ்ளோ பெரிய தாக்கம் இருந்திருக்காது. எல்லா மனுஷங்களுக்கும் இரண்டு முகம் இருக்கத்தான் செய்யுது. மோட்டிவேஷனல் ஸ்பீச் பேசறேன்னா நான் முழுமையாக நல்லவளாகவும் இருக்க முடியாது. இந்த படத்துல நடிச்ச மாதிரி பெரிய பாலியல் தொழிலாளியாகவும், இல்லாட்டி பெரிய மனிதர்களுக்கு அந்த வேலை செய்யக்கூடிய ஒரு நபரா  இருக்கிறதுனால நான் முழுக்க ஒரு கெட்டவளாகவும் இருக்க முடியாது.அப்படி இருக்கும் போது பாலியல் தொழில் பண்றவங்களே வறுமை காரணமாக தான் அதை பண்ணிட்டு இருக்காங்க. நாம் எடுத்திருக்கக்கூடிய பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் என்னவா இருக்குன்னா குடும்பத்தோட வறுமை சூழ்நிலையால் தான் தொழிலுக்கு வந்து இருக்கேன்னு சொல்றாங்க. காசுக்காக எதிரில் நிற்கிறவங்க வயசானவரா இருந்தாலும், என்ன நோய் உடையவரா இருந்தாலும் அதை பண்ணனும். ஆனா ஏற்றுக் கொள்வது ரொம்ப கஷ்டம்.அது மனஅளவில் இருந்தாலும் சரி, உடல் ரீதியாக இருந்தாலும் சரி. போறவங்க கொடுக்கக்கூடிய டார்ச்சர் பத்தி எல்லாம் கேட்டுட்டு தான் நாங்க பண்ணினோம். 

அந்த பெண்களை எல்லாம் பாலியல் தொழிலாளின்னு சொல்றாங்க, ஆனா அவங்ககிட்ட போயிட்டு வர்ற ஆண்களை இந்த சமூகம் விமர்சனம் பண்றதில்ல. நான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசணும்ன்னு கிடையாது. அது அவங்களோட குடும்ப சூழல்தான். வெளிநாட்டில் இருக்கிற மாதிரி அதெல்லாம் சட்டப்பூர்வமாக இங்கேயும் கொண்டு வந்தாங்கன்னா அது தொழிலாக தான் பார்க்கப்படும்.அப்படி இருக்கும்போது யாரோ ஒருத்தரோட கஷ்டத்தை இந்த படத்தில் நான் ஏற்று பண்ணியிருக்கேன் அப்படிங்குற மாதிரி தான் எனக்கு தோணுது" என தெரிவித்துள்ளார்.







Advertisement

Advertisement

Advertisement